Breaking News

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது செய்யக்கூடாது - டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை dgp sylendra babu

அட்மின் மீடியா
0

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை.

மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைதடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி: கிழ்காணும் அறிவுரைகள் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

i) திருமண உறவு. காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது,

ii) அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.

iii) குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவுசெய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

iv) குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.

v) முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை)உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும்.

இவ்வறிவுரைகளை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு முனைவர்.செ.சைலேந்திரபாபு இ.கா.ப. காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத் தலைவர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback