Breaking News

ஆதாா் இணைக்காமல் மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இலவச மின்சார மானியம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அறிவித்துள்ளது

மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மேலும் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இந்தமாதம் மின் கட்டணம் செலுத்த ஆன்லைனிலும் நேரிலும் ஆதார் எண் இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடிகின்றது ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. 

இந்நிலையில் தற்போது ஆதார் இணைக்காமல் மின் கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் அறிவித்துள்ளது 

மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு நவம்பர் 24 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கடைசி நாள். ஒரு நுகர்வோர் நவம்பர் 28-ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவம்பர் 30 ம் தேதிவரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்கப்படும்.

ஆதார் எண் இல்லாவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், கண்டிப்பாக ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback