உம்ரா விசாவிற்கான செல்லுபடி காலம் 90 நாட்களுக்கு நீட்டிப்பு.. முழு விவரம்..umrah visa validity 90 days
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா விசாவிற்கான செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா விசாவிற்கான செல்லுபடி காலத்தை 90 நாட்களுக்கு நீட்டித்துள்ளது .இதற்க்கு முன்பாக 30 நாட்களாக இருந்த உம்ரா விசாவை தற்பொழுது 90 நாட்கள் வரை நீட்டித்துள்ளது
அத்துடன் உம்ரா செய்யவிருக்கும் நபர்கள் உம்ரா அனுமதிகளுக்காக (umrah permit) Nusuk அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நீங்கள் உம்ரா விசாவை https://maqam.gds.haj.gov.sa/ மின்னணு தளம் மூலம் பெறலாம். https://maqam.gds.haj.gov.sa/ போர்ட்டலில் உள்நுழைந்து தேவையான சேவைகளை முன்பதிவு செய்து விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு வழங்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைன் கட்டணத்தையும் செலுத்தலாம்.இந்த நடவடிக்கைகள் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் விசா அதே தளத்தின் மூலம் கிடைக்கும். இவ்வாறு வழங்கப்படும் விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும்.
umrah
umrah visa
umrah visa validity 2022
umrah visa validity 90 days
Saudi Arabia extends Umrah visa for all international pilgrim
Umrah pilgrims can travel within the kingdom during the 90 days
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
