Breaking News

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ள அழைப்பு RANIPET JOBS

அட்மின் மீடியா
0

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வருகின்ற 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் SSLC, HSC, ITI, Diploma, Any Degree, பொறியியல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறவுள்ளார்கள். இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற வேலை நாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டு கலந்து கொள்ளலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.



முகாம் நடைபெறும் நாள்


25/11/2022

 

காலை 10:00 AM மணி முதல் மாலை 01.30 PM வரை


முகாம் நடைபெறும் இடம்:


DISTRICT EMPLOYMENT OFFICE,

NO.9, OLD BSNL OFFICE, 

ARCOT ROAD,

Ranipet,

NEAR HEAD POST OFFICE

 

கல்வி தகுதி:


எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

 

https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/co_login


முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்


https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/352211230002


மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/352211230002

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback