Breaking News

15 பயன்பாடு கொண்ட சோலார் மிக்சி -- இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும் Biju Narayanan solar mixer

அட்மின் மீடியா
0

 

கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த பிஜு நாராயணன் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஸ்மார்ட் சோலார் டிசி மிக்ஸி கண்டு பிடித்துள்ளார் இந்த மிக்சியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

ஸ்மார்ட் சோலார் டிசி மிக்சி வித் கிரைண்டர் சிறப்பம்சங்கள்:-

20W சோலார் பேனல் அல்லது மின் இணைப்பு மூலம் சார்ஜ் செய்யலாம். 

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், மிக்ஸி எட்டு மணிநேரம் வரை பேக்அப் மூலம் செயல்படும். 

மிக்ஸியை சூரிய சக்தி அல்லது மின்சாரம் மூலம் இயக்க முடியும்

சாதாரண மிக்சிகளைப் போலல்லாமல், இது பல்வேறு பணிகளைச் செய்யும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 15 தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது

டிசி மோட்டாரில் சாதனம் வேலை செய்வதால், அதிக சத்தம் இல்லை.

இந்த மிக்சியில் தேங்காய் துருவல் செய்யலாம்

இந்த மிக்சியில்  காய்கறிகளை வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் நறுக்கலாம்

இந்த மிக்சியில்  மொபைல் போன்களை சார்ஜ் செய்யலாம்

இந்த மிக்சியில் வைஃபை மோடம்களை இணைக்கலாம்

இந்த மிக்சியை வாக்யூம் கிளீனராக செயல்படுத்தலாம்

இந்த மிக்சியில்  ரேடியோ  எப்.எம் அல்லது பெண்டிரைவ் மூலம் பாடல் கேட்கலாம் 

இந்த மிக்சியினை ஒரு விசிறியை இணைக்கலாம்

இந்த மிக்சியில் எமர்ஜென்சி விளக்கு உள்ளது,

சமையலறையில் புகை அல்லது எல்பிஜி கசிவைக் கண்டறிவதற்கான சென்சார்  உள்ளது இதன்மூலம் புகையைக் கண்டறிந்ததும் மிக்ஸி எச்சரிக்கை அலாரம் அடிக்கும். 

மேலும் இந்த மிக்சியினை ரிமோட் கண்ட்ரோல் மூலம் உபயோகிக்கலாம்

 வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=xM99gHvyeSk

 

Biju Narayanan solar mixer

Biju Narayanan solar mixie

solar mixer

solar mixer kerala  

solar mixie

DC MIXER 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback