Breaking News

102 பயனிகளுடன் பறக்க டேக் ஆப் ஆகும்போது விமானத்தின் குறுக்கே வந்த தீயனைப்பு வாகனம் மீது மோதி விபத்து - திக் திக் வீடியோ

அட்மின் மீடியா
0

பெரு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய விமானம்.. 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

 

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் தீயனைப்பு வாகனத்தில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு

ெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் இருந்து LA2213 என்ற உள்ளூர் விமானம் 102 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில்  வேகமாக சென்றுகொண்டு இருந்த போது எதிர்பாரதவிதமாக ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. இதனால், அந்த தீயணைப்பு வாகனம் தீ பிடித்து எரிந்தது  மேலும் விமானத்தின் பக்கவாட்டு பகுதியும் எரியதுவங்கியதுஉடனடியாக வேறு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயனை அணைத்தனர் இதில் அந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த இருவர் பலியாகினர், மேலும் விமானத்தில் இருந்த 102 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டார்கள்.விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 இந்நிலையில் விமானம் தீயனைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Mario_Moray/status/1593722246350118912

https://twitter.com/Zemedeneh/status/1593846468657512448

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback