Breaking News

வாகன ஓட்டிகளே உஷார் போக்குவரத்து புதிய விதிகள் அபராதம் முழு விவரம் tamil nadu traffic rules and fines in tamil language

அட்மின் மீடியா
0

 மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் புதிய அபராதம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், 

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபதாரம்

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபதாரம்

வாகன பந்தயங்களில் ஈடுபட்டாலோ, மாசு ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்கினாலோ ரூ.10,000 அபராதம் 

பர்மிட் இன்றி சென்றாலோ, தேவையின்றி ஓலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ.1000 அபதாரம்

பதிவு எண் இல்லாமல் வாகனம் இயக்கினால் ரூ.5,000 என அபதாரம் 

அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ₹2,000 அபராதம்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹500 அபராதம்

தலைக்கவசம் அணியாவிட்டால் ₨1,000 அபராதம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர்  தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

செல்போன் பேசிக்கொண்டோ, அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதலின் மூலம் பிடிபட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் இனி ரூ.2,000க்கு பதில் ரூ.4000 அபராதம்

வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் 

இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback