தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் விவரம்...special trains diwali 2022
தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே 32 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதில், நெல்லைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்
தாம்பரத்தில் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
எண் 06021 தாம்பரம் – திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும்.
எண் 06022 திருநெல்வேலி சந்திப்பு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தஞ்சாவூர்- செகந்திரபாத் இடையே சிறப்பு ரயில்
தஞ்சாவூருக்கு 22,29 ஆகிய தேதிகளிலும்,
தஞ்சாவூரிலிருந்து செகந்திரபாத்திற்கு 24,31 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
செகந்திரபாத்திலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் ரயில், தஞ்சாவூருக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கமாக தஞ்சாவூரிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில்,செகந்திரபாத்திற்கு மறுநாளை காலை 6.30 மணிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 வரை தாம்பரம் ஹைதரபாத் சிறப்பு ரயில்
ஹைதராபாத் - தாம்பரம் தினசரி சிறப்பு ரயில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 வரை ஹைதராபாத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து மதுரை, சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்
எண் - 06052 நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடைகிறது.
ரயில் (எண் -06051) பெங்களூரு கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில்கள் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரயில்
திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த சிறப்பு கட்டண ரயில் எண்.06780 இயக்கப்படுகிறது.
அதிகாலை 6.20 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, காலை 10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - தானாப்பூர் சிறப்பு ரயில்
ரயில் (06190) அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, பழனி, கோயம்புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக்கிழமைகளில் மதியம் 02.30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தானாப்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக பயணித்து திங்கட்கிழமை அதிகாலை 04.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில்
ரயில் எண் 06253 மைசூரில் இருந்து 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரெயில் 22.10.22 அன்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Tags: தமிழக செய்திகள்
