Breaking News

பள்ளிகளில் மாணவர்களுக்கு திரையிடப்படும் தி ரெட் பலூன்” திரைப்படம் பார்க்க the red balloon

அட்மின் மீடியா
0

 தமிழக அரசு பள்ளிகளில் "தி ரெட் பலூன்"திரைப்படம் இன்று  திரையிடப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து மாணவர்களின் கலந்துரையாடலுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 



1956-ம் ஆண்டிலேயே வண்ணப்படமாக வெளிவந்த பிரெஞ்சு மொழி திரைப்படமான "தி ரெட் பலூன்” ஆஸ்கார், உள்ளிட்ட சர்வதேச விருதுகள் பல பெற்ற குறும்படமாகும். கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம் தான் தி ரெட் பலூன்’

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும் என கூறியுள்ளனர். 

தி ரெட் பலூன் கதை:-

பள்ளி செல்கிற ஒரு சிறுவன் (பாஸ்கல்) வழியில் ஒரு விளக்குக்கம்பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிவப்பு ஹீலியம் பலூனைக் கண்டு கம்பத்தில் ஏறி அதனை எடுத்துக்கொள்கிறான். அந்த பலூனை எடுத்துக்கொண்டு பள்ளி செல்கையில் பலூனைக் கையில் வைத்துக்கொண்டிருப்பதால் பேருந்தில் ஏற நடத்துனரால் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டமாகவே சென்று பள்ளி செல்கிறான்.

பள்ளியின் உள்ளே பலூனைக் கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அதனை வெளியே விட்டுவிட்டுச் செல்கிறான். மாலை பள்ளிமுடிந்து வருகையில் அந்த பலூன் வெளியே பாஸ்களுக்காக காத்திருக்கிறது. அப்பொழுது மழை தூரத்தொடங்குகிறது. தெருவில் குடைபிடித்து நடக்கும் ஒவ்வொருவரின் குடைகளுக்கும் தன் பலூனுக்கு இடம் பெற்று தன்பலூன் நனையாமல் தான் நனைந்து வீடு வந்து சேருகிறான். 

பல்லடுக்குமாடி குடியிருப்பாக இருக்கிற அவனது வீட்டில் அவனது பாட்டி பலூனை அனுமதிக்காது சன்னலில் தூக்கி எறிந்து விடுகிறார். ஆனால் பலூன் பாஸ்கலின் மீது அதீத அன்புடன் அவனைவிட்டு எங்கும் செல்லாமல் அவனுடனேயே இருக்கிறது. அடுத்த நாள் பள்ளிசெல்கையில் பலூனை எடுத்துக்கொள்கிறான். பலூன் பாஸ்கலைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருவரும் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக்கொண்டே செல்கின்றனர். இப்போது பாஸ்கல் பேருந்தில் ஏறிக்கொள்கிறான். பலூன் பேருந்தைத் தொடந்து பறந்து வருகின்றது. இது அனைவருக்கும் வியப்பைத்தர அனைவரும் வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர். 

பாஸ்கல் பள்ளி செல்லும் வழியில் எதிரில் ஒரு சிறுமி (சபைன்) நீல நிற பலூனுடன் வர இரு பலூன்களும் சந்தித்துக்கொள்கின்றன. இரு பலூன்களும் ஒருவருடனேயே செல்ல விரும்புகின்றன. இருப்பினும் அவரவர் பலூனை அவரவர் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

 

பாஸ்கல் பள்ளியின் உள்ளே செல்ல பலூனைப் பார்த்து மற்ற குழந்தைகள் சத்தமிடுகின்றனர். இதனைக்கண்ட பள்ளி முதல்வர் பாஸ்கலைத் தனி அறையில் அடைத்துவைத்துவிட்டு வெளியே செல்கிறார். இதைக்கண்ட பலூன் முதல்வருடனேயே அவரைத்துரத்திக்கொண்டு செல்கிறது. மாலை பள்ளிமுடிந்தபின் முதல்வர் அவனை விடுவிக்கிறார். 

பாஸ்கல் வீட்டிற்குச் செல்லும் பொழுது தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பலரால் துரத்தப்படுகிறான். அவர்களிடம் அன்று தப்பித்துக் கொண்ட பாஸ்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் பாட்டியுடன் கோவிலுக்குச்சென்று திரும்புகையில் மீண்டும் சிறுவர்களால் துரத்தப்பட்டு தன் பலூனை இழந்து விடுகிறான். 

அப்பொழுது அச்சிறுவர்கள் தங்களுக்குள்ளான சண்டையில் பலூனை கல்லால் அடித்து உடைத்து விடுகின்றனர். உடைந்த தன் பலூனருகே பாஸ்கல் அழுதுகொண்டு அமர பாரிஸ் நகரத்தின் கடைகளிலிருந்த பலூன்கள், சிறுவர்கள் பெரியவர்கள் தெரு வியாபாரிகள் என அத்துனைபேரின் கைகளிலிருந்த பலூன்களும் பல வண்ண பலூன்களாய் உயரே பறந்து செல்கின்றன. அவை அனைத்தும் பாஸ்கலை நோக்கிப்பறந்து வந்து அவன் கைகளில் விழுகின்றன. 

பாஸ்கல் வியப்பும் மகிழ்வுமாய் அந்த பலூன்களைப் பிடித்துக்கொள்ள அந்த பலூன் அவனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வானில் பறப்பதுடன் படம் முடிகிறது.. 

:-நன்றி விக்கி பீடியா:-

தி ரெட் பலூன் படம் பார்க்க:-

https://www.youtube.com/watch?v=VexKSRKoWQY

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback