ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கையின் முக்கிய தகவல்கள் jayalalitha death
அட்மின் மீடியா
0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தங்களது விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பற்றிய உண்மை நிலையை அறிய விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளது.
- 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார்
- போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர்களும் தாமதிக்காமல் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, உடல் பருமன், மாறுபட்ட உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைபோ தைராய்டிசம், வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் மற்றும் மூச்சு குழாய் அலர்ஜி, போன்றவற்றால் பாதிப்பு என உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பே அதிக காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவர் சிவகுமார் ஆலோசனை படி மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் கூறியுள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.என்றும் பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா போன்றவர்கள், ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரை செய்திருந்தனர். இருந்தபோதிலும், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அது நடக்காதது ஏன். எனவும் கேள்வி எழுப்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2016 அக்டோபார் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
- மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தாலும், அது நடக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு சுயநினைவுடன் இருந்த ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார்
- ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்த நிலையில், அவருடன் அமெரிக்க மருத்துவர் சிகிச்சை குறித்த விவாதித்தார்
- மேலும், விசாரணை அறிக்கையில், குறிப்பாக ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிச.5-ஆம் தேதி இரவு 11.30 மணி என மருத்துவமனை கூறும் நிலையில், 4-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கே இறந்து விட்டார் என சாட்சியம் தெளிவுப்படுத்துகிறது
- 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.
- மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்
- அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்
- ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்
