Breaking News

வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்தலாம்.! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! high court of madras

அட்மின் மீடியா
0

 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமதின்றதில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது . ஆனால் சங்கத்தேர்தல் நடைபெற கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தேர்தல் நடத்த தடை விதித்து அப்போது தீர்ப்பு வெளியாகியது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னைஉயர்நீதிமதின்ற சங்கத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர் .இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது சங்க விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பளித்தது. அதில் சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் செய்யப்படுகின்றது எனவும் ஏற்கனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback