ஞானவாபி மசூதியில் கார்பன் சோதனை நடத்தக்கோரிய இந்து அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி நீதிமன்றம் gyanvapi masjid
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை கண்டறிய கார்பன் சோதனை நடத்தக்கோரிய இந்து அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்து வாரணாசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்றும் அது செயற்கை நீரூற்று அமைப்பு இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருக்கும் என மசூதி தரப்பில் கூறப்பட்டது கூறினார்கள்,மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
மேலும் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என தீர்ப்பு வழங்கியது.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி
.jpg)