ஹெல்மட் போடாமல் சென்ற போலிஸ்காரரை ஹெல்மட் போட சொன்ன நபரை மிரட்டிய காவலர்- வைரல் வீடியோ
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் போடுமாறு அக்கறையுடன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அந்த வாகன ஓட்டியை வழிமறித்து ஒருமையில் ஆபாசமாக பேசியுள்ளார் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்
அந்த நபர் உங்கள் நல்லதிற்கு தானே சொன்னேன் எனக் கூறுகின்றார் அதற்க்கு அந்த காவலர் நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ”என கூறுகிறார். காவலர் சீருடையில் இருக்கும் அந்த காவலர் இளைஞரை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
