இனி வாட்ஸப்பில் வியூ ஒன்ஸ் ஸ்கீரின் ஷாட் எடுக்க முடியாது - வந்தாச்சு புது அப்டேட்
வாட்ஸ்ஆப் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது மேலும் வாட்ஸப் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம் என்கின்ற நிலை உள்ளது
வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
கடந்த
ஆண்டு வாட்ஸ் அப்-பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வியூ ஒன்ஸ்' மூலம்
வரும் புகைப்படங்களை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால்
'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட்
எடுக்க முடியும்.ஆனால் தற்போது, பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும்
வகையில், வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதாவது ஒரு முறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. முன்னதாக, ’view once’ என அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் ஸ்க்ரீன்ஷாட் அல்லது ரெகார்ட் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஆனால், இந்த வசதி தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளத.
தற்போது வாட்ஸ்அப் பீட்டா மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். கூடிய விரைவில் அனைவரும் பயன்படுத்தமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: தொழில்நுட்பம்