நவராத்திரி நிகழ்ச்சியில் கல் எரிந்ததாக கூறி இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து பிரம்பால் அடித்த போலிஸ் !!வீடியோ
அட்மின் மீடியா
0
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சில முஸ்லீம் ஆண்களை காவலர்கள் கம்பத்தில் கட்டி, பிரம்புகளால் அடித்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றது.
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள் உந்தலா கிராமத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இஸ்லாமியர்கள் சிலர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக இதில் 43 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 13 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சில இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை பொதுமக்கள் மத்தியில் கம்பத்தில் கட்டி அடித்துள்ளனர். பொது இடத்தில் போலீசார் அளித்த இந்த தண்டனையை, அங்கு கூடியிருந்த மக்கள், கரகோஷம் எழுப்பி ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்ததுடன் "பாரத் மாதா கி ஜெ" என முழக்கமிட்டுள்ளார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
.jpg)