Breaking News

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 8 பேரை விசாரிக்க தமிழக அரசு உத்தரவு! jayalalitha death sasikala

அட்மின் மீடியா
0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் நேற்று  ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 

2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விகே,சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் கூறியுள்ளது.  மேலும் எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.என்றும் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் அஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், விசாரணை அறிக்கையில், குறிப்பாக ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிச.5-ஆம் தேதி இரவு 11.30 மணி என மருத்துவமனை கூறும் நிலையில், 4-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கே இறந்து விட்டார் என சாட்சியம் தெளிவுப்படுத்துகிறது என்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் எனவும் அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது. 

மேலும் வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும். என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, 

சசிகலா, 

சசிகலா உறவினரான சிவகுமார், 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 

முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒய்.வி.சி.ரெட்டி, 

பாபு ஆபிரகாம் 

ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உரிய விசாரணை நடத்துவதுடன் சட்ட நிபுணர்கள் ஆலோசனை பெற்று 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback