Breaking News

கர்நாடகாவில் 550 ஆண்டுகள் பழமையான மதரசாவில் பூட்டை உடைத்து இந்து வழிபாடு செய்த நபர்கள்- வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

  புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் பழமையான மஹ்மூத் கவான் மதரஸா உள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது

இந்நிலையில் கடந்த புதன்கிழமை தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான மஹ்முத் கவான் மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, இந்து முறைப்படி வழிபாடு நடத்தியுள்ளார்கள்இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது பிதார் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது, அந்த வீடியோவில் மதரஸா படிக்கட்டில் நின்று கொண்டு சிலர் "ஜெய் ஸ்ரீராம்", "இந்து தர்ம ஜெய்" என முழக்கங்களை எழுப்புகின்றார்கள்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ashoswai/status/1578124415937568770

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback