மஸ்ஜித்துன் நபவி யை 3D வடிவில் முழுவதுமா VIRTUAL TOUR வடிவில் சுற்றி பார்க்க Al-Masjid al-Nabawi
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்காக சவூதி அரசு 3D வடிவிலான மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது
சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன் நபவி ஆகும். முஹம்மது நபி ஸல் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுவாகும் மேலும் இந்த பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித தலமாகும். மதீனா சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த மதினா நகரில் முஹம்மது நபி ஸல் அவர்களின் வீடு அமைந்துள்ளது.அந்த வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றது
இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த ,முஹம்மது நபி ஸல் அவர்களால் கட்டபட்ட இந்த பள்ளிவாசலை நாம் மெய்நிகர் 3D வடிவில் பார்க்கலாம்
நவீன உலகில் வீட்டிலிருந்தபடியே மதீனாவின் முக்கியமான இடங்கள், வாயில்கள், நபிகள் நாயகத்தின் அடக்க தலம், கேலரி, மியூசியம், நூலகம் என அனைத்தும் இந்த 3D முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை சவூதி மன்னர் பகத் அவர்களின் குழு உருவாக்கியுள்ளது. இதனை உங்கள் வீட்டிலிருந்து உங்கள் மொபைல் , அல்லது லேப்டாப், கம்யூட்டர் என அனைத்திலும் இணையம் வழியாக பார்க்கலாம். அப்பறம் என்ன உடனே கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து பார்க்கவும்
கீழ் கொடுக்கப்பட்டுள்ள க்ளிக் செய்யவும்
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
