Breaking News

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை metro train

அட்மின் மீடியா
0

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

தீபாவளியை முன்னிட்டு, நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback