28ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு milk strike tamilnadu
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி வருகிற 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றார்கள்
இந்நிலையில் சேலத்தில் இன்று பால் உற்பத்தியாளர் நல சங்க கூட்டம் நடை பேற்றது அதில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-லிருந்து ரூ.42 ஆகவும் அதேபோல் எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ.41-லிருந்து ரூ.51 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த கோரிக்கை மீது 26-ம் தேதிக்குள் பால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வருகிற 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.
#milk strike tamilnadu
#TN Milk Producers Welfare Association
#Milk strike
#Milk Producers Welfare Association strike
