Breaking News

முக்கிய செய்தி:- தமிழ்நாடு முழுவதும் RSS ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுப்பு 

 

திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம்,  திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுப்பு என காவல்துறை தகவல்தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.சுதந்திரதின 75 ஆம் ஆண்டு ,அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை. அக்.2-ஆம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளனர். 

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி தர உயர்நீதிமன்றம் பரிசீலிக்க கூறிய நிலையில், சட்டம்- ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback