BREAKING சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிந்து சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவு
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி சவுக்கு சங்கர் யூடியூப் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது
மேலும் சமூக வலைதளங்களில் இருந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யுமாறு வெளியிட்ட பதிவுகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Tags: தமிழக செய்திகள்