Breaking News

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை.

அட்மின் மீடியா
0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது


மேலும் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டுள்ளது

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ரத்து செய்தனர். அத்துடன் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். 

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் உறுப்பினர்களிடம் 15 நாள் முன்னரே நோட்டீஸ் அனுப்பவேண்டும். அந்த விதிகளை மீறி தான் ஜூலை 11 பொதுக்கூட்டம் நடைபெற்றது’ எனவும் ஒபிஎஸ் தரப்பு வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள், இபிஎஸ் தரப்பிடம், ‘ நீங்கள் தானே இப்போது பொதுச்செயலாளர். பிறகு ஏன் மீண்டும் உடனடியாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முயற்சிக்கிறீர்கள் என கேட்டனர்.

மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால், வழக்கை நவம்பர் 21 அன்று ஒத்திவைத்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் வரையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback