தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு
இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான அரசாணை வெளியீடு
இந்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37 இன் 1967)-இந்திய அரசாங்கத்தால் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (PFI) சட்டவிரோத சங்கமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
மத்திய உள்துறை அமைச்சகம் PFI மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்த பிறகு, PFI மற்றும் அதன் பிற அமைப்புகளை 7 & 8 பிரிவுகளின் கீழ் 'சட்டவிரோதம்' என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும்தெரிவித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்