Breaking News

சி.விஜயபாஸ்கர்,எஸ்.பி.வேலுமணி, மீது வழக்கு பதிவு, வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முழு விவரம்

அட்மின் மீடியா
0

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 



இந்நிலையில் கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு சுமார் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வழக்கின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது

அதேபோல் அதிமுக ஆட்சியில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஊத்துக்கோட்டை வேல்ஸ் மருத்துவமனைக்கு சான்று வழங்கிய புகாரில் சி.விஜயபாஸ்கர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback