Breaking News

இஸ்லாமியர்களின் புனித நகரம் மதீனாவில் தோண்ட தோண்ட தங்கம், மற்றும் காப்பர் கண்டுபிடிப்பு...முழு விவரம்

அட்மின் மீடியா
0

புனித நகரான மதீனாவில் இருக்கும் அபா அல் ரஹா, மற்றும் அல் மாத்திக்க என்ற இடத்திலும்   பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது





மதினா சிறப்புகள்:

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் நகரங்களில் ஒன்று சவுதி அரேபியாவில் இருக்கும் மதீனா . 

உலகில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்று சவுதி அரேபியாவில் அமைந்துள்ளமதினாவும் ஒன்று

இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி இங்குதான் அமைந்து உள்ளது. இது இறைத்தூதர் நபிகள் நாயக்கத்தால் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும்.

இந்த புனித மதினாவில்தான் இஸ்லாமிய உலகின் நினைவுச் சின்னங்களான புராதனமான முஹம்மது நபியவர்களின் வீடும், பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. 

மேலும், மதீனா நகரில்தான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

மதினாவில்தான் இறைத்தூதர் நபிகள் நாயக்கத்தின் அடக்கஸ்தலமும் உள்ளது. 

இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த புனித நகரான மதீனாவில் பூமிக்கு அடியில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது

சவுதி அரேபியாவின் கனிம ஆய்வு மையத்தால் மேற்கொள்ளபட்ட ஆய்வு ஒன்றில் மதீனா பிராந்தியத்தில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்கப் படிவுகள் மற்றும் உள்ள அல்-மாடிக் பகுதியில்  தாமிரம் தாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பூமிக்கு அடியில் மதீனாவில் பல இடங்களில் தங்கம் அதிக அளவில் இருக்கலாம். அதேபோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான காப்பர் மிக அதிக அளவில் இருக்கலாம். இந்த பகுதி பொக்கிஷம் போல தங்கம் மற்றும் காப்பர் வளங்களை அதிகம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதன் மூலம் 533 மில்லியன் முதலீடுகளை பெற முடியும். 4 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback