Breaking News

ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகம்!

அட்மின் மீடியா
0

ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் டெஸ்டிங் துவங்கி இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.




இதனை தொடர்ந்து, விரைவில் எடிட் ட்விட் அம்சத்தை ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய எடிட் ட்விட் அம்சம் மூலம், ட்விட் செய்த முதல் அரை மணி நேரத்திற்குள் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட உள்ளது. 

எடிட் செய்யப்பட்ட ட்விட்களில், உண்மையான பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஐகான், டைம்ஸ்டாம்ப் மற்றும் லேபல் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கும் வகையில் வழங்கப்பட உள்ளது‌. 

எடிட் ட்விட் அம்சம் மூலம் ட்விட்டர் பதிவு எத்தனை முறை எடிட் செய்யப்பட்டு இருக்கிறது, எந்த நேரத்தில் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். விரைவில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட‌ உள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback