தெரு நாயை காருக்கு வெளியே கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர்.. வைரல் வீடியோ
தெரு நாயை காருக்கு வெளியே கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர்.. வைரல் வீடியோ
அராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் ரஜ்னீஷ் கால்வா என்ற பிரபல மருத்துவர், தனது காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.அந்த மருத்துவர் காரை ஓட்டிச்செல்லும் வேகத்திற்கு , கயிற்றால் கட்டப்பட்டிருந்த அந்த நாய் சாலையில் அங்கும் இங்குமாக காரின் பின்னாலேயே ஓடி வந்துள்ளது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் சென்ற மக்கள், காரை நிறுத்தி நாயை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வைரலாக பரவியது
அதனை தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அந்த
மருத்துவர் அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்ற நாயை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர்
தெரிவித்துள்ளார்.விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ