பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்
பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை-யும் பாஜகவுடன் இணைத்துள்ளார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரிந்தர் சிங், இரு முறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அம்ரிந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, இவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார் இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரன் ரிஜூ, பா.ஜ., தலைவர் சுனில் ஜகார், பஞ்சாப் பா.ஜ., தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைந்தார்.
Tags: இந்திய செய்திகள்
