கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 12-ம் தேதி காலை10 மணி முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். என்று தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
விண்ணப்பிக்க:-
Tags: தமிழக செய்திகள்