Breaking News

ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



இந்தியன் ரயில்வே நிர்வாகம் இரவு நேரப் பயண விதிகளில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக இரவுப் பயண விதிகளில் சில புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி 

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசவோ அல்லது பாட்டு கேட்கவோ கூடாது. 

இரவு நேரங்களில் இரவு விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் படி நடந்து கொள்ள கூடாது. 

முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண் பயணிகள் தனியாக பயணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். 

ரயில்வே ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் இரவு வேளைகளில் அமைதியாக பணியாற்ற வேண்டும் என்றும், இதனை மீறும் நபர்கள் மேல் மீறி செயல்படுபவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டால் இந்த புகாரின் பேரில்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback