Breaking News

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சி பதிவு நீக்கம் – தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 253 கட்சிகள் செயலற்றவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 



சில அரசியல் கட்சிகள் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு செயல்படாமல் உள்ளன. இந்த கட்சிகள் செயல்படுகிறதா என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று சரிபார்த்தபின் 86 அரசியல் கட்சிகள் தங்களது முகவரியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கும் பதில் இல்லை. இதனால் 86 கட்சிகள் தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 253 அரசியல் கட்சிகள் முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback