380 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான இதயம் கண்டுபிடிப்பு ! முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதைபடிவ வரலாற்றுக்கு முந்தைய மீன்களின் உடலுக்குள்ளிருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயத்தை கண்டுபிடித்துள்ளனர்
உலகில் ஆக பழமையான வரலாற்றுக்கு முந்தைய ஒரு மீனின் இதயம் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இதயம் 380 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.இது உலகின் பழமையான இதயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் தொல் பொருள்களை ஆய்வு நடத்தி வந்தனர்.
அந்த கற்களில் ஒன்றில் இந்த மீனின் படிமம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது.பொதுவாக, மென்மையான திசுக்களை விட எலும்புகள்தான் புதைபடிவங்களாக மாறுகின்றன. ஆனால் கிம்பர்லியில் உள்ள இந்த பகுதியில், கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயம் உட்பட மீனின் உள் உறுப்புகளில் பலவற்றைப் தாதுக்கள் பாதுகாத்துள்ளன. இதனை 'கோகோ பாறை உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது.
- கோ கோ என்று அழைக்கப்படும் மீன் வகை இப்போது அழிந்துவிட்டது என்றும்
- இந்த மீன்வகை டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னரே சுமார் 60 ஆண்டுகள் பழமையானது.
- மனிதர்கள் உள்ளிட்ட முதுகு எலும்புள்ள அனைத்து மிருகங்களிலும் இதயம் எவ்வாறு உருமாறியது என்பதை தெரியப்படுத்தக்கூடிய முக்கிய கண்டுப்பிடிபு
- இந்த மீனின் இதயம் மற்ற மீன்களை விட பரிணாம வளர்ச்சி அடைந்திருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த மீனின் இதயம் மனிதர்களின் இதயம் போன்றே இருந்துள்ளது.மனிதர்களின் உடல் அமைப்பை விளக்குவதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Tags: வெளிநாட்டு செய்திகள்