தமிழகம் முழுவதும் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்க கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது அதன்படி இன்று நள்ளிரவு முதல்.
திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கடந்த ஏப்ரம் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 4 மாத இடைவெளியில் தற்போது மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்