Breaking News

செல்போன் திருடியவனை ஓடும் ரயில் ஜன்னலில் 15 கிலோமீட்டர் வரை தொங்க விட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

பெகுசராயில், ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, போலீசில் ஒப்படைப்பு!

பீகார் மாநிலத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை திருட நினைத்த ஒரு திருடனை சக பயணிகள் ரயில் ஜன்னல் வழியாக லாவகமாக பிடித்து 15 கிமீ தொங்கவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

பீகார் மாநிலத்தில்  ரயில் பயணி ஒருவரிடம் திருடன் ரயில் ஜன்னல் வழியாக செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.

அதே நேரம் அதனை பார்த்த மற்ற பயணிகள் ஜன்னல் வழியாக அந்த திருடனின் இரு கைகளையும் பிடித்துவிட்டனர். அதே சமயம் ரயில் நகர்ந்தது இதனால் அந்த திருடன் நாள் தப்பிக்கவும் முடியாமல் தொங்கியபடி ரயிலுக்கு வெளியே 15 கிலோமீட்டர் தொங்கியபடி அடுத்த ரயில் நிலையம் வரை வந்துள்ளான் அங்கிருந்த ரயில்வே போலிசாரிடம் ஒப்ப்டைத்துள்ளார்கள்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/preciousviral/status/1570361262193938434

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback