Breaking News

திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு முழு விவரம் 114 பக்க PDF இணைப்பு

அட்மின் மீடியா
0

 திமுகவில் 15 வது உட்கட்சி தேர்தல் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதில் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது


திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் புதிய செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கோவை தெற்கு, கோவை வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாமக்கல் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதில்

கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கோவை வடக்கிற்கு ராமச்சந்திரனுக்கு பதிலாக ரவியும், 

நாமக்கல் மேற்கிற்கு மூர்த்திக்கு பதில் செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி கிழக்கிற்கு செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், 

திருவள்ளூர் மேற்கிற்கு பூபதிக்கு பதில் சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட செயலாளர்கள் :

சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா. சுப்பிரமணியன்,

சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த. வேலு, 

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சேகர்பாபு, 

சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சிற்றரசு, 

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளராக மாதவரம் சுதர்சனம், 

சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இளங்கோ என்ற இளைய அருணா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

114 பக்க முழு அறிக்கை படிக்க:-

https://drive.google.com/file/d/1Of5PJTexZJemty4aHvgUawWrNOwyfIv6/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback