UPI பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம்... முழு விவரம்
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது.
டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கம்தான் UPI, தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது.பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு யுபிஐ நிதிப் பரிவர்த்தனைக்கும் கட்டணத்தைச் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
இதனால் கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்
