Breaking News

NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்! முழு விவரம்...

 


அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.


NDTV நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான RRPRH நிறுவனத்திடம் NDTV நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்திற்கு கைமாறுவதாக நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. இந்த VCPL நிறுவனம் அதானி குழுமத்தின் கிளை நிறுவனம் என கூறப்படுகிறது. 

NDTV நிறுவனத்தில் VCPL பெற்றுள்ள 29.18 சதவீத பங்குகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், NDTV நிறுவனத்தின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க அதானி குழுமம் வெளிப்படையான பேரத்தை நேற்று அறிவித்தது. இதன் மூலம், NDTV நிறுவனத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதானி குழுமம் முயல்வது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.மேலும்  அந்நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்த உள்ளதால் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு தெரியாமலேயே கொல்லைப்புறமாக 29% பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியிருக்கிறது என்றும் இருப்பினும் இதழியல் அறம் காப்பாற்றப்படும் என்று NDTV செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback