Breaking News

முகமது நபிகள் சர்ச்சை...பாஜக எம்எல்ஏ கைது... ஹைதராபாத்தில் பதற்றம்

அட்மின் மீடியா
0

முகமது நபியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் இன்று கைது செய்யப்பட்டார். 

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

தெலங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம்எல்ஏவான ராஜா சிங்  முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்திருந்தார் 

அந்த விடியோ வைரலானதால் எம்எல்ஏவின் பேச்சைக் கேட்ட இஸ்லாமியர்கள் பலர் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜக கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback