Breaking News

பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அட்மின் மீடியா
0

அதிமுகவில் முந்தைய நிலையே தொடர தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட்டதாக கூறி ,அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நடைமுறையை தொடரும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவற்றையெல்லாம் மறந்து மீண்டும் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இணைந்து செயல்பட ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback