கோவை மாநகர காவல்துறையில் ஊர்காவல்படை பணிக்கு ஆட்கள் தேவை - மாநகர காவல்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கோவை மாநகர காவல்துறையில் ஊர்காவல்படை பணிக்கு ஆட்கள் தேவை - மாநகர காவல்துறை அறிவிப்பு
கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணிபுரிய ஆர்வம் உள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் கோவை காந்திபுரம் C-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான தகுதிகள் :
1. 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
3. கோவை மாநகர காவல் எல்லை பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
5. உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
6. மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிபுரிபவர்களும் சுயதொழில் செய்யவர்களும் சேரலாம்.
தேவையான சான்றிதழ்களின் நகல்கள்:
1. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2. மாற்றுச் சான்றிதழ்
3. முகவரி சான்றிதழ்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
Tags: வேலைவாய்ப்பு
