Breaking News

மின்னனு கழிவுகளை குறைக்க நாடு முழுவதும் ஒரே சார்ஜர் - மத்திய அரசு திட்டம்?

அட்மின் மீடியா
0

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜரை பயன்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளது.

இந்தியாலில் பயன்படுத்தப்படும் லேப்டாப், டேப்லட், மொபைல் உள்ளிட்ட அனைத்து வகையான சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜர்களை பயன்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மத்திய நுகர்வோர் துறை தொடங்கியுள்ளது. மின்னணு கழிவுகளை குறைப்பதற்கும் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரும்பாலான போன்கள் type c சார்ஜர் வடிவமைப்பை கொண்டுள்ளன. 12 ஆயிரத்திற்கு குறைவான போன்களும், லேப்டாப் போன்ற சாதனைகளும் வேறு வகையிலான சார்ஜர்களை கொண்டுள்ளன.இந்த வேறுபாடுகளை கலைவதன் மூலம் ஒரே சார்ஜர் என்ற திட்டத்தை சாத்தியப்படுத்தலாம் என கூறப்படுகிறது 

மேலும் இதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் கண்டுபிடிப்பு கூட்டமைப்புகளின் (EPIC) அறக்கட்டளை உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback