கேரளாவில் குண்டும் குழியுமான சாலையில் குளித்து, துணி துவைத்து யோகா செய்த இளைஞர்… வைரல் வீடியோ
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில், அதே பகுதியை சார்ந்த கம்சா என்ற இளைஞர் பக்கெட், சோப், மக் உடன் வந்து, தேங்கி கிடந்த நீரில் துணிகளை துவைத்தும், குளித்தும், நீரில் நின்று தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.
ந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் விநோதமான முறையில் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன போராட்டத்தை நடத்திய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
