தமிழகத்தில் எலிபேஸ்ட், சாணி பவுடர் விற்க விரைவில் தடை ..அமைச்சர் மா. சுப்பிரமணியம்
தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட், சாணி பவுடர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை எண்ணிகையை அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலானோர் எலி பேஸ்ட் , சாணி பவுடர் போன்றவற்றை அதிக அளவு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
எலி பேஸ்டை சாப்பிட்டால் அது உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயல் இழந்து ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய் விடுகிறது.
ரத்தம் உறையா நிலை ஏற்படுவதால் மூளை மற்றும் நுரையீரலில் உள்ளுக்குள்ளையே ரத்தம் கசிய ஆரம்பித்து இறப்பு நேர்கிறது.
இதேபோல் அபாயகரமான ரசாயண பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் சாணி பவுடரும் உயிரை குடிக்கக் கூடியது. தற்கொலை முடிவை எடுக்கும் பலரும் இதுபோன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால், இதன் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் விற்பனை செய்யும் கடைகளில் இதை டிஸ்ப்ளே செய்யக்கூடாது என்றும், தனிநபர்களுக்கு எலி பேஸ்ட், சாணி பவுடர்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கூட்டமாக வந்தால் மட்டுமே அதனை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
