கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்க காவல்துறை எண்கள் அறிவிப்பு
பள்ளி, கல்லூரி வளாக பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிப்பு.பள்ளி, கல்லூரி வளாக பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை குறித்து புகார் அளிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண்களை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ளார. தகவல் கொடுப்பவர்கள் மற்றும் கொடுக்கப்படும் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தகவல் அளிப்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை அளிக்க மேண்டுமென்ற அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.அதன்படி,
மதுரை – 94981-81206,
விருதுநகர் – 94439-67578,
திண்டுக்கல் – 85258-52544,
தேனி – 93440-14104,
இராமநாதபுரம் – 83000-31100,
சிவகங்கை – 86086-00100,
திருநெல்வேலி – 99527-40740,
தென்காசி – 93856-78039,
தூத்துக்குடி – 95141-44100,
கன்னியாகுமரி – 70103-63173
ஆகிய எண்களில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து புகார் அளிக்கலாம் என தென் மண்டல ஐஜி கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
.jpg)