Breaking News

சுதந்திரதினத்தை முன்னிட்டு சவூதி, அமீரகம், குவைத், ஓமன்,பஹ்ரைன், கத்தார் நாடுகளுக்கு விமான டிக்கெட் சலுகைகள் ஏர் இந்தியா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்திய நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சவூதி, அமீரகம், குவைத், ஓமன்,பஹ்ரைன், கத்தார் நாடுகளுக்கு விமான டிக்கெட் சலுகைகள் ஏர் இந்தியா அறிவிப்பு





இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா வரவிருக்கும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவிற்கு பயணம் செய்யும் GCC பயணிகளுக்கு சிறப்பு சுதந்திர தின சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன் இந்தியா ஒன் ஃபேர்”  என்ற திட்டத்தினை அறிமுகபடுத்தியுள்ளது

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வளைகுடா நாடுகளில் இருந்து ன் விமான நிலையங்களிலிருந்தும் இந்தியாவில் உள்ள எந்த இடத்துக்கும் அனைத்து நேரடி விமானங்களிலும் ஒரு வழி பயண டிக்கெட் கட்டணத்தில் சலுகையை விமான நிறுவனம் வழங்குகிறது.




இந்த சலுகையின் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை, கொச்சி உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட்டுகளுக்கு, பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 21, 2022 வரை விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பயணிகள் இந்தச் சலுகை என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து டிக்கெட்டுகளிலும் 35 கிலோ இலவச பேக்கேஜ் அலவன்ஸ் மற்றும் 8 கிலோ ஹாண்ட் பேக்கேஜ் அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.airindia.in/independenceday-special-offer.htm

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback