Breaking News

இதுதான் இந்தியா:- ராமயண விநாடி வினா போட்டியில் முதல் இடம் பிடித்த இஸ்லாமிய மாணவர்... முழு விவரம்

அட்மின் மீடியா
0

கேரளாவில் நடந்த ராமாயண வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்


கேரளாவில் வல்லன்சேரியில் உள்ள இஸ்லாமிய கலைக் கல்லூரியில் முகமத் ஜபிர், முகமத் பசித் ஆகியோர் பயின்று வருகிறார்கள். 

டிசி புக்ஸ்' என்ற தனியார் அமைப்பு சார்பில் மலப்புரத்தில் சமீபத்தில் ராமாயண வினாடி - வினா போட்டி நடந்தது.இதில், மாநிலம் முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஐந்து மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முகமது ஜபீர், முகமது பஷீத் ஆகியோர் முறையே முதல் இடம், இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள்

இது குறித்து முகமது ஜபீர் மற்றும் முகமது பஷீத் கூறுகையில்

இந்த கல்லுாரியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து, சீக்கியம், பவுத்தம் உள்ளிட்ட மதங்களின் கலாசாரம், இலக்கியம் சம்பந்தமான பாடங்களும் உள்ளன.

ராமாயணமும், மகாபாரதமும் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம். எனவே, அனைவரும் இவற்றை படிக்க வேண்டும். அனைத்து மதங்களுமே நல்லிணக்கத்தைத் தான் போதிக்கின்றன; வெறுப்புணர்வை போதிக்கவில்லை. ராமாயணத்தின் நாயகனான ராமர், நீதியின் உருவகமாக செயல்பட்டவர்; சகிப்புத்தன்மை மற்றும் அமைதியை போதித்தவர். தன் தந்தை தசரதனுக்கு அளித்த வாக்குறுதிக்காக, தனது ஆட்சியையே தியாகம் செய்தவர். ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

ராமாயணம் தொடர்பாக நடந்த வினாடி - வினா போட்டியில் இஸ்லாமிய மாணவர்கள் இருவரும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இருப்பது இந்தியாவின் மதசார்பின்மையை மீண்டும் உறுதி செய்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback