அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இந்த பொதுக்குழவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார் அப்போது அவர்
அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார்.அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 30 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்து பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார்.எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால், அதிமுகவிற்குள் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மனக் கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அவை தொலையட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும் , டிடிவி தினகரனும் இருக்கின்றனர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள்
