அண்ணா பல்கலை கழகத்தில் இந்த படிப்பு படித்தால் அரசு வேலை நிச்சயம் முழு விவரம்
சென்னை அண்ணா பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டில், 'பி பிளான்' என்ற நகரமைப்பு திட்டமிடலில், இள நிலை படிப்பை துவங்க, தமிழக அரசு ஒப்புதல்அளித்துள்ளது.
இந்திய அளவில் அடுத்த பத்தாண்டுகளில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்கும் வகையில், புதிய படிப்புகளைத் தொடங்கவேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அந்த பரிந்துரையில் இளநிலை திட்டமிடல் பட்டம் பி.பிளான். படிப்பில் 6 ஆயிரம் பேரும், முதுநிலை திட்டமிடல் எம். பிளான். படிப்பில் 2 ஆயிரம் பேரும் என, ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின்- கட்டடக்கலை - திட்டமிடல் பள்ளியில், இளநிலை, முதுநிலை திட்டமிடல் பட்டப் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.
இளங்கலைப் பட்டப் படிப்பில் 75 இடங்களும், முதுகலை பட்டப் படிப்பில் 60 இடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'பி பிளான்' படிப்புக்கான பாடதிட்டம் உள்ளிட்ட விஷயங்களை இறுதி செய்ய சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசரத் தேவை என்பதால் போர்க்கால அடிப்படையில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
