பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது - திருத்தம் செய்யப்பட்ட தமிழ்நாடு புதிய மோட்டார் வாகன விதி முழு விவரம்
மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசானையில்
வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்பயணிகளை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது.
மேலும் வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளின் எரிச்சல் ஏற்படுத்துதல் கூடாது. புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்
அதேபோல் பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும்போது தவறான நோக்கில் தொடக்கூடாது. பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் கேட்கக்கூடாது. எந்தவொரு பயணிக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
.jpg)